'மீம்ஸ் வச்சு கலாய்க்க மட்டும் தான் முடியுமா'?...'இதையும் பண்ணலாம்'...மாஸ் காட்டிய பேராசிரியர் !
முகப்பு > செய்திகள் > தமிழகம்மீம்ஸ்கள் என்றாலே கலாய்க்க மட்டும் தான் என்றிருக்கும் நிலையில், அதனை சிலர் கருத்து தெரிவிக்கவும் பயன்படுத்தி கொண்டார்கள். ஆனால் கருத்து தெரிவிக்க மட்டும் அல்ல, பாடம் எடுக்கவும் பயன்படுத்தலாம் என நிரூபித்திருக்கிறார் பேராசிரியர் ஒருவர்.
அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் பாண்டி குமார். இவர் மீம்ஸ் வாயிலாக கணினி அறிவியல் பாடத்தை நடத்தி மாணவர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். இவருடைய கதைகள், நகைச்சுவைத் துணுக்குகள் மற்றும் மீம்ஸ்கள் மாணவர்கள் மனதில் எளிதில் பதிந்து விடுவதால் மாணவர்கள் யாரும் இவரது வகுப்பை தவறவிடுவது இல்லை.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவரான இவர், 12ஆம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெற்றதால் பல கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் தனது கடின உழைப்பால் எந்தெந்த கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் போனதோ அந்தக் கல்லூரிகளில் எல்லாம் பேராசியராக பணியாற்றி உள்ளார்.
C, C++ போன்றவற்றிற்கான மீம்ஸ் புத்தகங்களை உருவாக்கியுள்ள இவர், கிராமப்புற மாணவர்களும், முதல் தலைமுறை பட்டதாரிகளும் எளிய முறையில் புரிந்து கொள்ளும் வகையில் பாடம் நடத்த வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என கூறியுள்ளார்.