'தாய் மற்றும் தாத்தாவின் சடலத்துடன் தனிமையில் இருந்த சிறுவன்!'... செய்வது அறியாமல் சிறுவன் எடுத்த விபரீத முடிவு!... இதயத்தை ரணமாக்கும் சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உடல்நிலை பாதிப்பால் இறந்த பெண்ணின் தந்தை மற்றும் அவரது மகன் ஆகியோர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'தாய் மற்றும் தாத்தாவின் சடலத்துடன் தனிமையில் இருந்த சிறுவன்!'... செய்வது அறியாமல் சிறுவன் எடுத்த விபரீத முடிவு!... இதயத்தை ரணமாக்கும் சோகம்!

திருப்பூர் காங்கேயம் ரோடு ஜெய்நகரில் வசித்து வந்தவர் தேவராஜ். இவருடைய மனைவி அபர்ணா. தனியார் பள்ளியில் ஆசிரியாரக பணியாற்றி வந்த இவர், தனது கணவரை 14 வருடங்களுக்கு முன் விபத்தில் பறிகொடுத்தார். இவர்களுக்கு ஜித்தின் என்ற மகன் உள்ளார். கணவர் மறைவுக்குப் பின், மகன் ஜித்தினுடன் தனது தந்தை வெள்ளியங்கிரியுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அபர்ணா பணியில் இருந்து நின்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஜித்தினின் படிப்பு பாதியில் நின்றது. இதன் காரணமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு பள்ளிக்கு செல்வதை ஜித்தின் நிறுத்திக் கொண்டான். வருமானம் இல்லாததால், வறுமையின் பிடியில் சிக்கித்தவித்த அபர்ணா, மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதன் விளைவாக, கடந்த 17ம் தேதி மகன் ஜித்தினுடன் அபர்ணா பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

மகள் இறந்ததை அறிந்த வெள்ளியங்கிரி அன்றே அவரது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தாய் மற்றும் தாத்தா இறந்த துக்கத்தில் செய்வதறியாது வீட்டிலேயே சிறுவன் ஜித்தின் தாய், தாத்தா பிணத்துடன் இருந்துள்ளான். அதன் பின், நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் தாத்தாவின் செல்போனை எடுத்து கோவையில் உள்ள மாமா வினோத்குமாருக்கு போன் செய்து நடந்தவற்றைக் கூறி, தனக்கு பயமாக இருக்கிறது எனவும், என்ன செய்வது என்று தெரியவில்லை எனவும் அழுதுகொண்டே தெரிவித்துள்ளான்.

உடனடியாக, திருப்பூரில் உள்ள தனது உறவினருக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு, அபர்ணா வீட்டுக்குச் சென்று பார்க்குமாறு வினோத்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். வீட்டை கண்டுபிடித்த அவரது உறவினர் நேற்று முன்தினம் இரவு அந்த வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது தாத்தாவும், பேரனும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அபர்ணா வறுமையின் காரணமாக இறந்ததாக கூறப்படுகிறது. உறவினர், உற்ற நண்பர்கள் இல்லாமல் தனித்து வாழ்ந்து பழகி தாத்தா, தாய் இவர்கள் மட்டுமே உலகம் என சொல்லிக்கொடுத்ததால் தனிமையில் இருந்த ஜித்தின் இனி தனக்கு யாரும் இல்லை என நினைத்து தற்கொலை முடிவை எடுத்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

TIRUPPUR, BOY, MOM, POVERTY