‘பிறந்த நாள் கொண்டாடிவிட்டு’... ‘வீடு திரும்பிய இளைஞர்களுக்கு’... 'நடந்தேறிய பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆனைமலை அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘பிறந்த நாள் கொண்டாடிவிட்டு’... ‘வீடு திரும்பிய இளைஞர்களுக்கு’... 'நடந்தேறிய பரிதாபம்'!

கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த கோட்டூர் மலையாண்டிப் பட்டணத்தை சேர்ந்தவர் கார்த்தி (23). இவர் தனியார் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலைப் பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது சகோதரருக்கு பிறந்தநாள். இதனைக் கொண்டாட கார்த்தி தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் (23) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மீனாட்சிபுரத்திற்கு சென்றார்.

அங்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்து விட்டு, இரவு 10 மணியளவில் கார்த்தி, ஆனந்தகுமார் இருவரும் மலையாண்டிபட்டணத்துக்கு திரும்பினர். இருசக்கர வாகனத்தை ஆனந்தகுமார் ஓட்டினார். இருசக்கர வாகனம் வளந்தாயமரம் பகுதி அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது, அதே சாலையின் எதிரே மற்றொரு இருசக்கர வாகனம் வந்துள்ளது. அதில் பொள்ளாச்சி அருகே இருக்கும் போடிபாளையத்தைச் சேர்ந்த அசோக்மணி (18), கார்த்திகேயன்(17) ஆகியோர் வந்துகொண்டிருந்தனர்.

எதிர்பாரதவிதமாக இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.  இதில் நான்குபேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில், ஆனந்தகுமார் மற்றும் கார்த்திகேயன் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடித்துதுடித்து பலியாகினர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மற்ற இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அசோக்மணி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

கார்த்திக்குக்கு அம்பரம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் விபத்தில் உயிரிழந்த ஆனந்தகுமார், கார்த்திகேயன் ஆகியோரது உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ACCIDENT, CRIME, ANAMALAI, FRIENDS, BIRTH DAY, PARTY