"கள்ளக்காதல் பண்ற காசு தரமாட்டியா..." கேள்வி கேட்ட 'கள்ளக்காதலியின் தாய்'... வேன் டிரைவர் செய்த 'வெறிச்செயல்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட கள்ளக்காதலியின் தாயை குத்திக் கொன்ற வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை, ஜீவா நகர் பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகர். வேன் டிரைவரான இவருக்கும் இவரது மனைவி யுவராணிக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட யுவராணி செங்கல்பட்டில் உள்ள அவரது தாயார் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். புதுவண்ணாரப்பேட்டையில் தனியாக வசித்து வந்த சந்திரசேகருக்கு நாளடைவில், கணவரை பிரிந்து வாழும் தனலட்சுமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது.
கடந்த சில மாதங்களாக தனலட்சுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை கண்ட சந்திரசேகர் அவருடன் பழகுவதை குறைத்தார். ஆனால் தனலட்சுமி அடிக்கடி சந்திரசேகரிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தார்.
இந்நிலையில் தனலட்சுமி, தனது தாய் ரத்னாவதி மற்றும் மகளுடன் நேற்றிரவு சந்திரசேகர் வீட்டிற்கு வந்து பணம் கேட்டு ரகளையில் ஈடுபட்டார். அப்போது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சந்திரசேகரின் வேன் கண்ணாடியையும் அடித்து உடைத்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரசேகர் வீட்டில் இருந்த கத்தியால் ரத்னாவதி, தனலட்சுமி, அவரது மகள் ஆகியோரை சரமாரியாக குத்தினார். இதில் ரத்னாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்தனர்.