'வாவ்.. இன்னைக்கு செம்ம வேட்டை!'.. 'திருடுற அவசரத்தில்'.. 'திருடனுக்கு வில்லனாய் மாறிய மறதி!'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை தண்டையார் பேட்டையில் செல்போன் ஸ்டோர்ஸ் வைத்திருப்பவர் ஜானகிராமன். தனது வீட்டருகே செல்போன் கடை வைத்திருந்த இவருக்கு அதிகாலை 3 மணிக்கு தனது கடையை யாரோ அடித்து உடைத்து திறப்பது போல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் விழித்தவர் உடனே கடைக்கு விரைந்தார்.

'வாவ்.. இன்னைக்கு செம்ம வேட்டை!'.. 'திருடுற அவசரத்தில்'.. 'திருடனுக்கு வில்லனாய் மாறிய மறதி!'

கடைக்கு வந்த அவர் சந்தேகப்பட்டது சரிதான். கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உடனே பதறிப்போன ஜானகிராமன் தனது கடைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது ஒரு புதிய ஆண்ராய்டு போன் மட்டும் கடையில் இருந்து களவு போயிருந்தது. ஆனால் கடையில் இருந்த கல்லாப் பெட்டியில் வைத்திருந்த பணமும் பத்திரமாக இருந்துள்ளது.

இதனையடுத்து ஜானகி ராமன் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். ஆக,  ‘ஒரே ஒரு ஆண்ராய்டு செல்போனைத்தான் இந்த திருடன் திருடிக் கொண்டு சென்றிருக்கிறான் போல?’ என்று சந்தேகப்பட்ட நேரத்தில்தான் அங்கு இன்னொரு பழைய செல்போனை  போலீஸார் கண்டுபிடித்தனர்.

ஜானகிராமனுக்கோ, அவரது ஊழியர்களுக்கோ சொந்தமில்லாத அந்த செல்போனை திருடும் அவசரத்தில், செல்போன் கடை ஓனர் கடைக்கு வரும் சத்தத்தை கேட்டது, அந்த திருடன் தனது செல்போனையோ அல்லது எங்கிருந்தோ திருடிய செல்போனையோ இங்கு விட்டுவிட்டு சென்றிருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ள போலீஸார் சிசிடிவி காட்சிகளை வைத்தும், திருடன் விட்டுவிட்டுப் போன செல்போனை வைத்தும் திருடனை தேடிவருகின்றனர்.

CHENNAI, THIEF, MOBILE