‘10 ஆண்டுகளாக’ கணவரை ‘ஃப்ரீசருக்குள்’ வைத்திருந்த மனைவி... ‘உடலுடன்’ கிடைத்த கடிதம்... ‘அதிர்ந்துபோய்’ நின்ற போலீசார்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் கணவரின் உடலை 10 ஆண்டுகளாக மனைவி ஃப்ரீசரில் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘10 ஆண்டுகளாக’ கணவரை ‘ஃப்ரீசருக்குள்’ வைத்திருந்த மனைவி... ‘உடலுடன்’ கிடைத்த கடிதம்... ‘அதிர்ந்துபோய்’ நின்ற போலீசார்...

அமெரிக்காவின் உடா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜீன் சவுரோன் மாதர்ஸ் (75). அவருடைய கணவர் பால் எட்வர்ட்ஸ் ஓய்வு பெற்ற படை வீரர். இந்நிலையில் கடந்த மாதம் 22ஆம் தேதி நடத்தப்பட்ட வழக்கமான சோதனையின்போது ஜீன் மாதர்ஸ் வீட்டில் இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது. பின்னர் அவர் இயற்கையாக மரணமடைந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து போலீசார் அவருடைய வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர்.

சோதனையின்போது ஜீன் மாதர்ஸின் கணவரான பால் எட்வர்ட்ஸின் உடல் அங்கிருந்த ஃப்ரீசரில் இருந்ததைப் பார்த்து போலீசார் அதிர்ந்துபோய் நின்றுள்ளனர். மேலும் அவருடைய உடலுடன் ஒரு கடிதமும் அவர்களுக்கு கிடைத்துள்ளது. அந்தக் கடிதத்தில், “என் மனைவி என்னைக் கொல்லவில்லை” என பால் எட்வர்ட்ஸின் கையெழுத்தில் எழுதப்பட்டிருந்துள்ளது. அந்தக் கடிதம் 2008ஆம் ஆண்டு எழுதப்பட்டது என்பதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர்.

ஜீன் மாதர்ஸ் அவருடைய கணவருக்கு கிடைக்கும் அரசு சலுகைகளைப் பெற வேண்டி அவர் இறப்பை மறைத்திருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், அவர் இதை தனியாக செய்தாரா அல்லது வேறு யாருடைய உதவியுடனாவது செய்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக ஜீன் மாதர்ஸ் சுமார் 1 லட்சத்து 77 ஆயிரம் டாலர்களை அரசு சலுகையாகப் பெற்றிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் பால் எட்வர்ஸின் சமூக பாதுகாப்பு மற்றும் முன்னாள் ராணுவம் தொடர்பான காசோலைகளையும் பெற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பால் எட்வர்ட்ஸ் உடலுடன் கண்டுபிடிக்கப்பட்ட கடிதத்தில் இருந்த சில தகவல்களை போலீசார் வெளியிட மறுத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

HUSBAND, DEADBODY, FREEZER, WIFE, POLICE, US