'மருமகனுக்கு' ஏற்கேனவே ஒரு 'மனைவி'... 'ஆத்திரத்தில்' கத்திரிகோலால் மாமனார் செய்த 'காரியம்'... பேருந்து நிலையத்தில் நிகழ்ந்த 'அதிர்ச்சி சம்பவம்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவர் தனது மகளை ஏமாற்றி திருமணம் செய்தது தெரிய வந்ததால் மாமனார் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் வெள்ளகோவில் புதிய பேருந்து நிலையத்தில் பூக்கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு சூர்யா என்பவரின் மகள் சினேகா என்பவரை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு மகளும், பிறந்து 10 நாளே ஆன குழந்தையும் உள்ளது. சூர்யாவும் வெள்ளகோவில் பேருந்து நிலையம் பகுதியில் பூக்கடை நடத்தி வருகிறார். மாமனார்- மருமகன் இடையே வியாபாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராஜசேகருக்க ஏற்கெனவே திருமணம் நடைபெற்றது சூர்யாவுக்கு தெரியவந்தது. இதனால் மருமகன் ராஜசேகர் மீது ஆத்திரத்தில் இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வெள்ளக்கோவில் பேருந்து நிலையத்திற்கு வந்த சூர்யா, அங்கு பேருந்துக்காக காத்திருந்த ராஜசேகருடன் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் வார்த்தை முற்றி சண்டையிட்டுக் கொண்டனர். இந்நிலையில் சூர்யா மறைத்து வைத்திருந்த கத்திரிக் கோலை எடுத்து ராஜசேகரின் உடலில் பல இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் ராஜசேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைப் பார்த்த பேருந்து நிலையத்திலிருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.