'காசிக்கு' எதுக்கு போற?... 'சிவபெருமான' பாக்க... அந்த சிவனே இந்த 'ட்ரெயின்ல' தான் டா 'லிவிங்ஸ்டன்!'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய ரயில்வே வரலாற்றில் முதன் முறையாக இந்து மதக் கடவுள் சிவபெருமானுக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் பெர்த் அமைக்கப்பட்டுள்ளது.

'காசிக்கு' எதுக்கு போற?... 'சிவபெருமான' பாக்க... அந்த சிவனே இந்த 'ட்ரெயின்ல' தான் டா 'லிவிங்ஸ்டன்!'

வாரணாசி - இந்தூர் இடையே காசி மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். இந்த ரயிலின் பி5 கோச்சில் 64வது சீட் எண்ணில் சிவனுக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் வண்ணமயமான காகிதங்கள் ஒட்டப்பட்டு, சிவன் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

முதல் நாள் பயணத்துக்காக பிரத்யேகமாக ரயிலில் ஒரு கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முடிவை நிரந்தரமாக்க ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, மென்மையான பக்தி பாடல்கள், இரண்டு பாதுகாவலர்கள், சைவ உணவு, ஏசி (AC) முதலிய அம்சங்கள் இந்த கோச்சை அலங்கரிக்கும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

TRAIN, DEITY, SHIVA, SEAT