'உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டோம்'... 'அதிரடி' அறிவிப்பை வெளியிட்டுள்ள 'நாடு'...
முகப்பு > செய்திகள் > உலகம்இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
உலகம் முழுவதையும் புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், வைரஸைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசியைக் கண்டறியும் ஆய்வு பல்வேறு நாடுகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இத்தாலியின் ரோம் நகரில் செயல்பட்டு வரும் தொற்று நோய் ஸ்பாலன்சானி மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் புதிய கொரோனா தடுப்பு மருந்து ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக அதன் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த தடுப்பு மருந்தை வைத்து எலிகளில் நடத்தப்பட்ட சோதனை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாகவும், இது மனித செல்களில் உள்ள கொரோனா வைரஸை அழிக்கும் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த சில மாதங்களில் இந்த மருந்து மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டு சோதனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.