பள்ளிகள் விடுமுறை.. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.. மாணவர்கள் செம ஹேப்பி அண்ணாச்சி..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

2020 ஆம் ஆண்டு உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்த ஆரம்பித்த கொரோனா வைரஸின் தாக்கம், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது.

பள்ளிகள் விடுமுறை.. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.. மாணவர்கள் செம ஹேப்பி அண்ணாச்சி..

இதன் காரணமாக, தமிழகத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் திறக்கப்ட்டன. அதே போல, கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடக்க பள்ளிகளும் திறக்கப்பட்டது. இதனிடையே, வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இதன் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிக்கு திரும்பிய மாணவர்களுக்கு, மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை குறித்த அறிவிப்பு ஒன்றை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளதால், மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுடன் மண்டல ஆய்வு கூட்டம், நெல்லையில் தொடங்கியது. இதில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், 'பள்ளிக் கட்டிடங்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம். ஒட்டுமொத்தமாக, பள்ளிகளை சீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இருந்த போதும், துரதிருஷ்டவசமாக நெல்லை பள்ளியில் துயரமான சம்பவம் நடந்துள்ளது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளை பரிசோதித்து, அதனை சீரமைக்கும் நடவடிக்கைகள் தொடங்கவுள்ளது.

இதையும் படிங்க : இன்று முதல் இரவு நேர ஊரடங்கு.. அறிவித்த மாநில அரசு..

மேலும், அனைத்து பள்ளிகளிலும் கூடுதல் கழிவறைகளை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போல, பேருந்தில் பள்ளி மாணவர்கள், படிக்கட்டில் தொங்கி வருவதை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பேருந்து அதிகம் இல்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருப்பதால், அதனை கவனத்தில் கொண்டு வந்து, அதிக பேருந்துகளை இயக்கவும் திட்டமிட்டு வருகிறோம். பாலியல் குற்றச்சாட்டுகளையும், மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டு, அவற்றின் மீது தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

டிசம்பர் மாதம் 25 - ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 2 - ஆம் தேதி வரை, பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும்' என அமைச்சரை அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பால், பள்ளி மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

TN SCHOOLS, EDUCATIONAL MINISTER, ANBIL MAHESH, LEAVE, SCHOOL STUDENTS, அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித் துறை, தமிழ்நாடு மாணவர்கள், பள்ளி மாணவர்கள்

மற்ற செய்திகள்