இன்று முதல் இரவு நேர ஊரடங்கு.. அறிவித்த மாநில அரசு.. நெருங்கும் ஒமைக்ரான்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா என்னும் கொடிய தொற்று, உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக அச்சுறுத்தியிருந்தது.

இன்று முதல் இரவு நேர ஊரடங்கு.. அறிவித்த மாநில அரசு.. நெருங்கும் ஒமைக்ரான்..

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல், இதன் உருமாறிய வைரஸ்களும் பரவி, உலக மக்களை ஒரு பாடு படுத்தியிருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் தான், ஓரளவுக்கு இதன் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வரத் தொடங்கினர். இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல மக்கள் திரும்பி வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் வைரஸின் அச்சுறுத்தல் ஆரம்பித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒமைக்ரான் என்னும் உருமாறிய தொற்று பரவ ஆரம்பித்த நிலையில், தற்போது வரை சுமார் 100 நாடுகளுக்கு மேல் வேகமாக இது பரவி வருகிறது. டெல்டா வைரஸைக் காட்டிலும், பல மடங்கு வீரியமும், அதே வேளையில் வேகமாக பரவக் கூடிய தன்மையுமுள்ள ஓமைக்ரான் தொற்றில் இருந்து, தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

இதில் இருந்து தங்களது மக்களை பாதுகாத்துக் கொள்ள, உலக நாடுகளும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஓமைக்ரான் தொற்று, இந்தியாவில் முதல் முறையாக மும்பை பகுதியில் பரவியது. தொடர்ந்து, தற்போது 7 மாவட்டத்திற்கும் மேலாக, இதன் பரவல் அதிகரித்து வருகிறது. அதே போல, பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பன்மடங்காக அதிகரித்து வருகிறது.

ஒமைக்ரான் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, இரவு நேர ஊரடங்கை செயல்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. மேலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வருவதால், மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்றின் காரணமாக, இரவு நேர ஊரடங்கை, முதல் மாநில அரசாக மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

இந்த ஊரடங்கு, இன்று இரவு முதலே அமலுக்கு வரும் நிலையில், இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும், மறு அறிவிப்பு வரும் வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

MADHYA PRADESH, OMICRON, NIGHT CURFEW, இரவு நேர ஊரடங்கு, ஒமைக்ரான், மத்திய பிரதேசம்

மற்ற செய்திகள்