1. உள்நாட்டு விமான கட்டணம் 7% - 9% வரை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தர மதிப்பீடு அமைப்பான கிரிசில் தகவல் தெரிவித்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் நிறுத்தப்பட்டதால் விமான சேவைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
2.சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.28,944க்கு விற்பனை செய்யப்படுகிறது.
3. கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார், விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவகலத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
4. எல்லை தாண்டி சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் எச்சரித்து திருப்பி அனுப்பியுள்ளனர். பேச்சுவார்த்தையின் போது கடலோர காவல்படையினர் தங்களை தாக்கியதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
5.‘‘பிரதமருக்கு பரிசாக தரப் பட்ட 2,772 பொருட்களும் வரும் 14ம் தேதி ஏலம் விடப்பட உள்ளதாகவும்,
பொருட்களின் அடிப்படை விலையும் 200 ரூபாயில் இருந்து 2.5 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
6. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீர் 22,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
7.நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், போஸ் தினசரி காய்கறி சந்தையை அகற்றி புதிய வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இவ்வாறு அகற்றப்படும் கடைகளுக்கு மாற்று இடம் வழங்கப்படவில்லை என்று, அப்பகுதி சந்தையில் உள்ள 350 கடைகளையும் அடைத்து வியாபாரிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
8. தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான காலாண்டுத் தேர்வு தொடங்கியது.
9. திருப்பதி அடுத்த சந்திரகிரி அருகே கர்நாடக மாநில அரசு சொகுசு பேருந்தும் சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதி சாலைவிபத்து உண்டானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
10. பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 10-ம் தேதி முதல் வெளியூர் பயணம் செய்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
ஒரு வாரத்திற்கு பொங்கல் விடுமுறை என்பதால் டிக்கெட் முன்பதிவு செய்ய மக்கள் ஆர்வத்துடன் இருந்த நிலையில், தென்மாவட்டங்களுக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தன.