"அதிமுகவா? திமுகவா?"... "உள்ளாட்சியை கைப்பற்றப் போவது யார்?"... பரபரப்பை கிளப்பும் "லைவ் அப்டேட்ஸ்"!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தின் ஊரக உள்ளாட்சிக்கான மறைமுக தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

"அதிமுகவா? திமுகவா?"... "உள்ளாட்சியை கைப்பற்றப் போவது யார்?"... பரபரப்பை கிளப்பும் "லைவ் அப்டேட்ஸ்"!

கடந்த மாதம் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், 513 மாவட்ட கவுன்சிலர்கள், 5087 ஒன்றிய கவுன்சிலர்கள், 9616 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 76, 712 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.

இந்நிலையில், 27 மாவட்டங்களில் ஊராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுயேட்சை உறுப்பினர்களே தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். 10 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றவர் தான் தலைவர் ஆக முடியும். ஆதலால், தலைவர் பதவியைப் பிடிப்பதில், தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

11.01.2020, மதியம் 1 மணி நிலவரப்படி, 27 இடங்கள் கொண்ட மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில், அதிமுக 14 இடங்களிலும், திமுக 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 314 இடங்கள் கொண்ட ஒன்றிய தலைவர் தேர்தலில், அதிமுக 137 இடங்களிலும், திமுக 115 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

ELECTIONS, TAMILNADU, LOCALBODY