'கொச்சியின் பிரபல அபார்ட்மெண்ட்'...'நொடியில் சுக்குநூறான 19 மாடி கட்டிடம்'... பரபரப்பு வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட பிரபல மரடு அடுக்குமாடி குடியிருப்பு வெடிவைத்து தகர்க்கப்பட்டது.
கேரள மாநிலம் கொச்சியில் மரடு பகுதியில் கடற்கரை ஒழுங்குமுறை விதிகளை மீறி 4 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது. இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க உத்தரவிடகோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி 4 அடுக்குமாடி குடியிருப்புகளையும் இடிக்க உத்தரவிட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மரடு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்த பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து மரடு பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட, ஹெச் டூஓ ஹோலி பெய்த், ஆல்பா செரைன், ஜெயின் கோரல் கேவ், கோல்டன் காயலோரம் ஆகிய 4 அடுக்குமாடி குடியிருப்புகளும் குண்டு வைத்து தகர்க்க முடிவு செய்யப்பட்டது. பெட்ரோலியம் எஸ்போஸிவ் சேஃப்டி ஆர்கனைசேஷன் என்ற நிறுவனம் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. நகரத்தின் மைய பகுதியில் இது அமைந்துள்ளதால் மிகவும் பாதுகாப்பான முறையில் கட்டிடத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நான்கு கட்டிடங்களில் ஆல்பா என்ற கட்டிடத்தில் 3 ஆயிரத்து 598 துளைகள் போடப்பட்டு அவற்றில் அமோனியம் நைட்ரேட் என்ற பொருள் நிரப்பப்பட்டுள்ளது. இதேபோல் ஹோலிசயத் என்ற கட்டிடத்தில் 2 ஆயிரத்து 290 துளைகள் இடப்பட்டு 395 கிலோ வெடிபொருட்கள் நிரப்பப்பட்டுள்ளன. கட்டிடம் இடிக்கப்படும் போது, அது உள்நோக்கி இடிந்து விழும் வகையில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கட்டிடத்தை சுற்றியுள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு 200 மீட்டர் தொலைவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெட்ரோலியம், வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த குழுவினர் ஏற்கனவே குடியிருப்பை ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
மேலும் மரடு பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. தரை, நீர் மற்றும் வான்வழி போக்குவரத்தும் தடை செய்யப்பட்டிருந்தது. முதற்கட்டமாக ஹெச் டூஓ ஹோலி பெய்த் அடுக்குமாடி குடியிருப்பு வெடிவைத்து இடிக்கப்பட்டது. இந்த குடியிருப்பின் 19 மாடிகள் 9 வினாடியில் தரைமட்டமாகின.
Watch video: A building in Kerala comes crashing down #demolition #maradu pic.twitter.com/1SpB9szNRf
— Reshmi A R (@Reshmi_AR) January 11, 2020
Flat (No.1) demolition in Kerala #Maradu
— Muneer Assainar 🇮🇳 منير اسينار (@ClickMuni) January 11, 2020
This flat violated the CRZ rule.
Strict warning to everyone who consider money and power above law.#MaraduFlats pic.twitter.com/0aFrgkwUU4