'பிகில்' சிறப்புக்காட்சிக்கு.. தமிழக அரசு 'அனுமதி'.. வெறித்தன 'கொண்டாட்டத்தில்' ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விஜய், நயன்தாரா, விவேக் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பிகில். தீபாவளி விருந்தாக நாளை திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தை அட்லீ இயக்கி, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து இருக்கிறார்.

'பிகில்' சிறப்புக்காட்சிக்கு.. தமிழக அரசு 'அனுமதி'.. வெறித்தன 'கொண்டாட்டத்தில்' ரசிகர்கள்!

அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்ததால் இந்த படத்தின் சிறப்புக்காட்சிக்கு அனுமதி மறுக்கப்படுவதாக செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்து இருந்தார். இதனால் சிறப்புக்காட்சி இல்லாமல் போய்விடுமோ? என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதற்கு மத்தியில் தயாரிப்பு நிறுவனம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி சிறப்புக்காட்சிக்கு அனுமதி கேட்டு இருந்தது.

இந்தநிலையில் சிறப்புக் காட்சிக்கான நிபந்தனைகளை பின்பற்றுவதாக தயாரிப்பு நிறுவனம் கூறியதால் நாளை ஒரு நாள் மட்டும் பிகில் படத்தின் சிறப்புக்காட்சிக்கு அனுமதி வழங்குவதாகவும், விடுமுறை தினங்களில் சிறப்புக் காட்சிக்கு ஏற்கனவே அனுமதி இருக்கிறது என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அதே நேரம் சிறப்புக்காட்சிகளுக்கு அரசு விதித்த கட்டணத்தையே வாங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி தமிழக அரசுக்கு ஏஜிஎஸ் நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் நாளைக்காலை திரையங்குகளில் பிகில் திரைப்படத்தின் சிறப்புக்காட்சிகள் ஒளிபரப்படும். இதனால் விஜய் ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் உள்ளனர்.

VIJAY, BIGIL