24 வயதில் '27 ஆயிரம்' கோடி.. ஒரே இரவில்.. உலக 'கோடீஸ்வரன்' ஆன இளைஞர்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவை சேர்ந்த 24 வயது எரிக்ஸி ஒரே இரவில் உலக கோடீஸ்வரன்  ஆகி இருக்கிறார். ஸி பிங் மற்றும் செங் சங் லிங் என்னும் தம்பதியினரின் மகன் எரிக்ஸி. இவர் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ளார். இவரது தந்தை சினோ பயோ பார்மாகியூடிகல் என்னும் கம்பெனியின் நிறுவனர் ஆக இருக்கிறார்.

24 வயதில் '27 ஆயிரம்' கோடி.. ஒரே இரவில்.. உலக 'கோடீஸ்வரன்' ஆன இளைஞர்!

சமீபத்தில் தங்களது மகனுக்கு பரிசளிக்க நினைத்த இந்த தம்பதியர் 2.7 பில்லியன்ஸ் பங்குகளை மாற்றியுள்ளார். இதன் வழியாக 3.8 பில்லியன் டாலர் மதிப்புடைய உலக கோடீஸ்வரன் ஆக எரிக்ஸி மாறியுள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் 27 ஆயிரம் கோடி ரூபாயாகும். ஸி பிங்கிற்கு இதுபோல ஏராளமான தொழில்கள் உள்ளன.

தற்போது தனது சுமையை குறைப்பதற்கும், தன்னுடைய குடும்பத்தாரின் மதிப்பை உயர்த்தவும் இந்த செயலை ஸி பிங் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. ஹாங்காங்கில் பரிசு மற்றும் பரம்பரை சொத்து மாற்றம் ஆகியவற்றுக்கு வரிகள் ஏதும் விதிக்கப்படுவதில்லை என்பதால், அங்கு இந்த பரிமாற்றம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

MONEY, CHINA