‘அதிவேகத்தில் வந்த லோடு வேன்’... ‘சைக்கிளில் வீடு திரும்பியபோது’... ‘மாணவர்களுக்கு நேர்ந்த கோரம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஈரோடு அருகே சரக்கு வாகனம் மோதியதில், சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘அதிவேகத்தில் வந்த லோடு வேன்’... ‘சைக்கிளில் வீடு திரும்பியபோது’... ‘மாணவர்களுக்கு நேர்ந்த கோரம்’!

ஈரோடு மாவட்டத்தில், ராயபாளையம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்,  தர்ஷன், சிவா ஆகிய இரண்டு 9-ம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும், கடந்த திங்கள்கிழமையன்று மாலை, சித்தோடு அருகே சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.  அப்போது அதிவேகமாக வந்த சரக்கு வேன் ஒன்று மாணவர்கள் இருவர் மீதும், வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் அங்கே சென்று கொண்டிருந்த மேலும் ஒரு மாணவன் படுகாயம் அடைந்தான். விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள், ஓட்டுனர் மற்றும் அவருடன் வந்த மற்றொருவர் ஆகிய இருவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து மாணவர்களும் பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு நான்குசாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏறபடுத்தியுள்ளது.

ACCIDENT, ERODE, STUDENTS