'30 வருஷ BSNL ஊழியர்.. பல கி.மீ நடந்தே வருவார்'.. '10 மாத சம்பள பாக்கி'.. 'ஒரு நொடியில் எடுத்த பரிதாப முடிவு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் சிரமத்தை கண்டுவருவதாக கூறப்படுகிறது.

'30 வருஷ BSNL ஊழியர்.. பல கி.மீ நடந்தே வருவார்'.. '10 மாத சம்பள பாக்கி'.. 'ஒரு நொடியில் எடுத்த பரிதாப முடிவு'!

இதனால் தாமாக ஓய்வு பெறுபவர்களுக்கு கூடுதல் பணப்பலன்களுடன் கூடிய ஓய்வுத் திட்டத்தையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில்தான் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூரில் பிஎஸ்என்எல் ஊழியர் ராமகிருஷ்ணன் 10 மாத சம்பளம் கிடைக்காததால், அலுவலகத்திலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

52 வயது மாற்றுத்திறனாளியான ராமகிருஷ்ணன் கடந்த 30 வருடங்களாக மலப்புரம் பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்து மயக்கத்துடன் பகுதி நேர துப்புர பணியாளராக பணிபுரிந்தவர். இந்த நிலையில் இவரின் தற்கொலையை தாங்க முடியாத மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அவரது குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகை அளிக்கப்படும் என்கிற உத்திரவாதம் கிடைத்த பின்னர் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். 

ராமகிருஷ்ணனின் உடல் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள் என்பதும், இன்னும் பலருக்கும் இப்படி சம்பள பாக்கி இருக்கிறது என்பதும் இம்மக்களின் ஒருமித்த குற்றச்சாட்டாக இருக்கிறது. 

KERALA, BSNL, EMPLOYEE, SALARY