‘பைக்கில் சென்ற இளைஞர் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்’.. சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து இளைஞர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘பைக்கில் சென்ற இளைஞர் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்’.. சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி..!

சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (25). மெடிக்கல் ரெப்பாக பணியாற்றி வரும் இவர், இன்று வேலை தொடர்பாக புளியந்தோப்பு கன்னிகாபுரம் மைதானம் அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் ஒன்று அவரது கழுத்து ஓரத்தில் பட்டுள்ளது. சுதாரித்துக்கொண்ட அவர் உடனே பைக்கை நிறுத்தியுள்ளார்.

ஆனாலும் ராஜசேகரனின் கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்துள்ளது. இதனை அடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மாஞ்சா நூல் அறுத்தது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மைதானப் பகுதியில் பட்டம் விட்ட இரு சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் கொருக்குபேட்டை பகுதியில் மாஞ்சா நூல் அறுத்து 3 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், மீண்டும் மாஞ்சா நூல் அறுத்து இளைஞர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CRIME, CHENNAI, MANJA, INJURED