'சென்னையில் திடீரென கலர் மாறிய கடல்'...'உடனே கிளம்பிய புரளி'...இதுதான் காரணமா?.... 'வைரலாகும் வீடியோ'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் திடீரென கடல் நீலநிறமாக மாறியது பலருக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்தது.

'சென்னையில் திடீரென கலர் மாறிய கடல்'...'உடனே கிளம்பிய புரளி'...இதுதான் காரணமா?.... 'வைரலாகும் வீடியோ'!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவான்மியூர், ஈச்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு கடல் அலைகள் திடீரென நீல நிறமாக மாறியது. அப்போது அங்கிருந்த மக்கள் உடனே அதனை புகைப்படம் எடுத்து ட்விட்டர், இன்ஸ்டா கிராம், மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதனால் இந்த நிகழ்வு பலராலும் பேசப்பட்டது. உடனே பலர் வீட்டிலிருந்து கிளப்பி கடற்கரைக்கு சென்று பார்த்தார்கள்.

முதலில் இதனை நம்ப மறுத்த சிலர், திருவான்மியூர் பகுதியில் கடல் நீல நிறமாக ஜொலித்தது அடுத்து பலருக்கும் கடலில் வீடியோ மற்றும் புகைப்படத்தை எடுத்து அனுப்பினார்கள். இதனிடையே இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொண்ட சிலர் பெரிய ஆபத்து வரபோகிறது என புரளியை கிளப்பி விட்டார்கள். இந்நிலையில் கடல் நிறம் மாறுவதற்கு, சமீபத்தில் பெய்த மழையால், நைட்ரஜன் கலந்த மாசு, கடலில் கலந்திருக்கலாம், அதனால் கடலின் நிறம் மாறியிருக்கலாம் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் பருவநிலை மாற்றம் கூட காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் தேசிய கடலோர ஆய்வு மையம் இதுகுறித்து ஆய்வு நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. அதன் பிறகு தான் சரியான காரணம் என்னவென்பது தெரியவரும். நள்ளிரவில் பரவிய இந்த தகவலால் திருவான்மியூர் கடல் பகுதியில் ஏராளமான இளைஞர்களும்,பெண்களும் திரண்டனர். இது தொடர்பான வீடியோ மாற்றும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

SEA SPARKLES, EAST COAST ROAD, ECR, NOCTILUCA SCINTILLANS, MICRO-PLANKTON