Darbar USA

மகனின் கல்யாணத்திற்கு... வாட்ஸ் ஆப்பில் வந்த மேட்ரிமோனி விளம்பரத்தால்... பரிதவித்த முதியவர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தனது மகனுக்கு பெண் பார்ப்பதற்காக சேலத்தில் போலி மேட்ரிமோனி மூலம், முதியவர் ஒருவர் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகனின் கல்யாணத்திற்கு... வாட்ஸ் ஆப்பில் வந்த மேட்ரிமோனி விளம்பரத்தால்... பரிதவித்த முதியவர்!

சேலம் மாவட்டம் சிவதாபுரத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் தனது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக, பெண் பார்த்து வந்துள்ளார். அப்போது வாட்ஸ் ஆப் மூலம் கிடைத்த  மேட்ரிமோனி இணையத்தை அணுகியுள்ளார். அந்த மேட்ரிமோனியில் மணமகளின் புகைப்படங்களை அனுப்ப முதலில் 5,000 ரூபாயை ஜெய்சங்கரிடமிருந்து மேட்ரிமோனி நிறுவனம் வாங்கியுள்ளது.

அதன் பின்னர் மணமகளின் முகவரியை பெறுவதற்காக அவரிடமிருந்து, 5 ஆயிரம் ரூபாயை மேட்ரிமோனி நிறுவனம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பணத்தை பெற்றுக்கொண்ட பின் மேட்ரிமோனி நிறுவனத்தின் செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டதால், அதிர்ச்சியடைந்த அவர், அந்த மேட்ரிமோனி நிறுவனம் அனுப்பிய மணமகளின் புகைப்படங்களை ஜெய்சங்கர் முகநூலில் பார்த்துள்ளார். அப்போதுதான் அந்தப் புகைப்படங்கள் எல்லாம், மணமகள்களின் புகைப்படங்கள் இல்லை என்பது தெரியவந்தது. 

மேலும் சமூக வலைதளங்களில்  பலரால் பகிரப்படும் வெவ்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த இளம் பெண்களின் புகைப்படங்களை சேகரித்து, போலியாக மேட்ரிமோனி இணையத்தை உருவாக்கி, பண மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதனால் பணத்தை இழந்த அவர் பரிதவித்துப் போனார். இதையடுத்து இந்த கும்பல் குறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.

FAKE, MATRIMONY, SALEM