Darbar USA

2 வருசம் கழிச்சு அணிக்கு திரும்பிய ஆல்ரவுண்டர்..! செம குஷியில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் பிரவோ 2 வருடம் கழித்து மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

2 வருசம் கழிச்சு அணிக்கு திரும்பிய ஆல்ரவுண்டர்..! செம குஷியில் ரசிகர்கள்..!

வெஸ்ட் இண்டீஸிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 போட்டி வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சீனியர் ப்ளேயரும், ஆல்ரவுண்டருமான பிராவோ மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அதன்பின்னர் சர்வதேச போட்டிகளில் அவர் விளையாடவில்லை. அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

மேலும் சமீப காலமாக வெஸ்ட் இண்டீஸ் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுகுறித்து சீனியர் வீரர்கள் நடந்திய பேச்சு வார்த்தையை அடுத்து பிராவோ மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் நடைபெற உள்ள அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் பிராவோ இடம்பிடித்துள்ளார்.

CRICKET, BRAVO, T20