“என்னையே புடிக்க வர்றியா? உன்ன பாத்ததே இல்ல? க்ரைமா?”.. “சிஆர்பிஎப் வீரரை முட்டி போட வைத்து” கத்தி முனையில் மிரட்டிய “கஞ்சா மணி!”
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி நிலக்கரி, இரண்டாவது சுரங்கத்தின் அருகில் இருந்து இரும்பு தளவாடப் பொருட்கள் திருடப்படுவதாக புகார் எழுந்தது.
இது தொடர்பான விசாரணைக்காக, அப்பகுதிக்கு விரைந்த மத்தியத் தொழிற்பிரிவு பாதுகாப்புப் படை வீரர்கள் செல்வேந்திரன், தாஸ் மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ரவுடி பெங்களூரு மணி என்கிற கஞ்சா மணி உள்ளிட்டோரிடம், மேற்கண்ட படைவீரர்கள் விசாரணையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென தொழில்பிரிவு பாதுகாப்பு படை வீரர் செல்வேந்திரனை கஞ்சா மணி கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.
அதன் பிறகு கஞ்சா மணியை, தாஸ் துரத்திப் பிடித்து, கஞ்சா மணியின் பைக் சாவியை தாஸ் எடுத்துக்கொண்டார். இதில் ஆத்திரம் அடைந்த கஞ்சா மணி, கத்தியை எடுத்து, ‘என்னையே புடிக்க வர்றியா? யார்ரா இவன் க்ரைமா?’ என்று முட்டிப்போட வைத்து மிரட்ட, இதை வீடியோ எடுத்த இன்னொரு வீரரைய்ம் மணி குத்த முயலுகிறான்.
அப்போது அந்த வீரர், நெய்வேலி உளவுப் பிரிவு ஏட்டான ஜானின் நண்பர்தான் தாஸ் என்று கூற, அதற்கு கஞ்சா மணி, ‘அப்படியா அவருக்கு போன போடு’ என்று மிரட்டிக்கொண்டே கத்தியால் குத்த முயல, அப்போது அங்கு வந்த மந்தாரக்குப்பம் இன்ஸ்பெக்டர் மீனாள், ‘நீ திருடுனியா ? இங்க ஏன் வந்த?’ என்று கேட்டுள்ளார். அதற்கு மணி, ‘இல்ல மேடம். எனக்கே உடம்பு சரியில்லை’ என்று சொல்லிவிட்டு நகர்கிறார். இந்த சம்பவம் முழுவதும் வீடியோவாக இணையத்தில் வலம் வருகிறது.
முன்னதாக, ‘நான்தான் பெங்களூர் மணி. என் பேர்ல 28 கேஸ் இருக்கு. நான் 307 செய்து 3 நாள் ஆகுது’ என்று ஓப்பன் டாக் கொடுத்து வீடியோ வெளியிட்டவர் கஞ்சா மணி என்பது குறிப்பிடத்தக்கது.