“அப்ப அது நமக்கு பயம் காட்டலயா?”... “5 மணி நேரமா படமெடுத்த நல்ல பாம்பு!”.. “கடைசியில் தெரிந்த உண்மை!”
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுச்சேரி வழுதாவூர் பகுதியில் உள்ளது தக்ஷணாமூர்த்தி நகர். அங்கிருந்த ஏரியை ஆக்கிரமித்து உருவானதாகக் கூறப்படும் அந்த நகரின் ஒரு பகுதியில், மாலை நேரத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
குறிப்பிட்ட நேரம் கழித்து உஸ்... உஸ்.. என்று சத்தம் கேட்டது. அதை யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் சிறிது நேரம் கழித்து ஆள நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியதும், அந்த உஸ் சத்தம் இன்னும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அப்போதுதான் அவ்வழியே வந்த 3 1/2 அடி நீளமுள்ள நல்ல பாம்பினை பலரும் கவனித்தனர்.
உடனே சிலர் அந்த பாம்பின் முன் கற்பூரம் கொளுத்தி வழிபடத் தொடங்கினர். சில இளைஞர்கள் நல்ல பாம்புடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தனர். ஆனாலும் 5 மணி நேரம் தொடர்ந்து படம் எடுத்துக் கொண்டிருந்த அந்த பாம்பினை, நல்ல பாம்பு என்பதால் யாரும் அடிக்கவில்லை. ஆனால் நீண்ட நேரமானதால் மக்கள் கூட்டம் கலையத் தொடங்கியது.
பின்னர் அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் வனத்துறையினர் வந்து அந்த பாம்பினை மீட்டனர். குளிர் காலம் என்பதால் இயற்கையான கதகதப்பு சூழலை நோக்கி அந்த பாம்பு நகர்ந்து வந்ததாகவும், ஆனால் மக்கள் நடமாட்டம் இருந்ததால் நீண்ட நேரம் படமெடுத்துக் கொண்டிருந்ததாகவும், அவ்வளவு நேரமும் பாம்பு பயத்தில் இருந்ததாகவும் வனத்துறை ஊழியர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.