'திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கை உள்ளவரா?'.. '2 பேருமே சிக்க மாட்டோம்!'.. ரஜினி சொன்ன பஞ்ச்.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவள்ளுவருக்கும் தனக்கு காவிச் சாயம் பூசப் பார்க்கிறார்கள், ஆனால் இருவருமே மாட்டிக்கொள்ள மாட்டோம் என்றும் பாஜக தரப்பில் இருந்து தனக்கு எவ்வித அழைப்பும் வரவில்லை என்றும் தம்மை பாஜக உறுப்பினராக நிறுவும் முயற்சி நடந்துகொண்டிருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் திருவள்ளுவர் சித்தர். ஞானிகளை சாதி, மதம் என எதற்குள்ளும் அடக்க முடியாது. அதோடு அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர், அவர் நாத்திகர் அல்ல, ஆத்திகர், அதை யாரும் மறுக்க முடியாது என்றும் கூறியுள்ள ரஜினி பாஜக அலுவலகத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது அவர்களின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கமால், ஆனால் ஊரில் உள்ள திருவள்ளுவர் சிலைகளுக்கு எல்லாம் காவி உடை அணிவித்தல் தேவையற்றது என்றும் தெரிவித்துள்ளார்.
என் மீது பாஜக சாயம் பூச முயற்சி - ரஜினிகாந்த் #Rajinikanth #BJP https://t.co/6dTt1lTHA3
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) November 8, 2019
அதுமட்டுமல்லாமல் மக்களுக்கான பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கும்போது இதை சர்ச்சையாக்கி அரசியல் செய்வது வேடிக்கையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் நிற்கும் எண்ணம் தன் கட்சிக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் தயாரிப்பு அலுவலகமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனலின் புதிய அலுவலகம் மற்றும் கே.பாலச்சந்தர் திறப்பு விழா நிகழ்ந்ததை ஒட்டி அதில் கலந்துகொண்ட நடிகர் ரஜினி இவ்வாறு பேசினார். அதன் பின்னர் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டருகே மீண்டும் அளித்த பேட்டியில் தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைமைக்கு வெற்றிடம் இருப்பதாகவும், தன்னை தங்கள் கட்சியில் சேரச் சொல்லி பலர் கேட்டாலும் முடிவெடுக்க வேண்டியது தான்தான் என்றும் அதற்காக அவர்கள் தன்னையே நம்பி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது என்றும் பேசியுள்ளார்.