மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ‘இலவச லட்டு’ பிரசாதம்..! தொடங்கி வைத்த முதல்வர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ‘இலவச லட்டு’ பிரசாதம்..! தொடங்கி வைத்த முதல்வர்..!

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி தீபாவளியன்று இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் தேதி குறிப்பிடமால ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் முதல்வர் பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலம் மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச லட்டு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இன்று காலை 10 மணிக்கு மேல் வரும் பக்தர்கள் அனைவருக்கும் 30 கிராம் எடையுள்ள தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோயிலுள்ள வன்னி விநாயகர் சன்னதி பகுதி கூடத்தில் நவீன கருவிகள் மூலம் லட்டுகள் தயாரிக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது.

EDAPPADIKPALANISWAMI, MADURAI, TEMPLE, LADDU