ஊரடங்கிலும் மாணவர்களுக்கு 'ரகசிய' நுழைவுத்தேர்வு... 'அதிர்ந்து' போன அதிகாரிகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, 12-ம் வகுப்பு மாணவர்களின் பேப்பர் திருத்துவது ஆகியவை தள்ளி போய்க்கொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியொன்று மாணவர்களுக்கு ரகசியமாக நுழைவுத்தேர்வு நடத்துவதாக மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பள்ளிக்கு நகராட்சி ஆணையர், வட்டாட்சியர் மற்றும் வருவாய்த் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாணவர் ஒருவர் மாஸ்க் அணிந்தபடி நுழைவுத்தேர்வு எழுதிக்கொண்டிருந்தார்.
இதைக்கண்ட அதிகாரிகள் பள்ளி வளாகத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றி விட்டு அதிகாரிகள் அந்த பள்ளியை இழுத்து பூட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.