பொன்னாடை, 'விருந்து'க்கெல்லாம் நோ அனுமதி ... அரசாங்க காசுல 'வெளிநாடு' போகக்கூடாது... தமிழக அரசு அதிரடி முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக அரசு செலவினங்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனா காரணமாக தமிழக அரசுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதைக்குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் அரசின் மொத்த செலவுகளில் 20% குறைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்து இருப்பதாவது:-
*அரசு விழாக்களில் பொன்னாடை, பூங்கொத்து, நினைவு பரிசுகள் வழங்குவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
*அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது. மாநிலத்திற்கு வெளியே அதிகாரிகள் விமானத்தில் சென்றாலும் ரெயில் கட்டணத்திற்கு இணையான கட்டணம் மட்டுமே அனுமதிக்கப்படும். அரசு செலவில் வெளிநாடு பயணத்திற்கும் தடை விதிக்கப்படுகிறது.
*விளம்பர செலவுகளை 25% குறைத்து கொள்ளவும் அரசு துறைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட அலுவலக தேவைகளுக்கு வாங்குவது 50% வரை குறைக்கப்பட வேண்டும்.
*இதேபோன்று நிர்வாக ரீதியான பணி மாற்றத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மதிய விருந்து, இரவு விருந்துகள் ஆகியவற்றையும் அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்.
*உபகரணங்களை கொள்முதல் செய்வதில் சுகாதாரம் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.