“விஜயகாந்த்தை முதல்வராக்கும் வாய்ப்பை தவற விட்டுட்டீங்க...” "மதுரையின் மருமகள் நான்..." "என் தாலி பாக்கியம் அவரை பேச வைக்கும்..." மதுரையில் 'பிரேமலதா' அதிரடி பேச்சு...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வராக்கும் வாய்ப்பை தமிழகம் தவறவிட்டது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரையில் பேசியுள்ளார்.

“விஜயகாந்த்தை முதல்வராக்கும் வாய்ப்பை தவற விட்டுட்டீங்க...” "மதுரையின் மருமகள் நான்..." "என் தாலி பாக்கியம் அவரை பேச வைக்கும்..." மதுரையில் 'பிரேமலதா' அதிரடி பேச்சு...

மதுரை திருப்பரங்குன்றம் அருகே தேமுதிக சார்பில் நடைபெற்ற மகளிர் தினவிழா பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதா ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் போது பேசிய பிரேமலதா, "ராசியான திருப்பரங்குன்றத்தில், 1973ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்முறையாக கூட்டம் நடத்தி நான்கு ஆண்டுகளுக்குப் பின் முதல்வரானார். அதுபோல விஜயகாந்த்தும் மதுரையில் கட்சியை தொடங்கி இன்று பொதுக்கூட்டம் நடத்துகிறார். எனவே நீங்கள் எண்ணும் எண்ணம் நிச்சயம் நிறைவேறும்." எனக் கூறினார்.

மேலும், "மதுரையின் மருமகளாக உங்கள் வீட்டு பெண்ணாகவே நான் பேசுகிறேன். விஜயகாந்த் வாழ்க்கை முழுவதும் எதிர்நீச்சல் போட்டே வென்றவர். விஜயகாந்த் பழைய கம்பீரத்தோடு சிங்கம் போல் நடந்து வந்து வெற்றி உரையை நிகழ்த்துவார். என் தாலி பாக்கியம் நிச்சயம் அதை நடத்திக்காட்டும். விஜயகாந்த் கருப்பு, நாங்களும் கருப்பு அவரும் எங்கள் வீட்டுப்பிள்ளை என தமிழக மக்கள் கூறுகிறார்கள். பழைய விஜயகாந்தாக நிச்சயம் அவர் வருவார், என பிரேமலதா குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "கெஜ்ரிவால் கட்சி ஆரம்பித்த ஒரு வருடத்திலேயே முதல்வர் ஆனார். ஆனால் தமிழகத்தில் விஜயகாந்த்தை முதல்வராக்கும் வாய்ப்பை தவறவிட்டது தமிழக மக்கள்தான்" என குற்றம்சாட்டினார்.

VIJAYAKANTH, PREMALATHA, MADURAI, THIRUPPARAKUNDRAM