‘ஃபோன் பண்ணியதும்’... ‘இருமலுடன் தொடங்கும்’... ‘கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் ட்யூன்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா வைரஸ் இந்தியாவில் அச்சுறுத்தி வரும் நிலையில், அது தொடர்பான விழிப்புணர்வை மத்திய அரசு மொபைல் ஃபோன் மூலம் ஏற்படுத்தி வருகிறது.

‘ஃபோன் பண்ணியதும்’... ‘இருமலுடன் தொடங்கும்’... ‘கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் ட்யூன்’!

இந்தியாவில், தமிழகம் உள்பட இந்த ஒரு வாரத்தில் மட்டும் 39 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவாமல் தடுக்கும் வகையில், மத்திய அரசு பிஎஸ்என்எல், ஜியோ செல்ஃபோன் நிறுவனங்கள் மூலம்  புதிய விழிப்புணர்வு முயற்சியை தொடங்கியுள்ளது.

அந்த நிறுவனங்களின் செல்ஃபோன் எண்களை அழைக்கும்போது, அதில் ஆங்கிலம், ஹிந்தியில் பதிவு செய்யப்பட்ட குரல் மூலம் விழிப்புணர்வு செய்தி ஒலிக்கப்படுகிறது. இருமலுடன் தொடங்கும் அந்த குரல் பதிவில், இருமும்போதும், தும்மும்போதும் முகத்தை கர்ச்சீப் கொண்டு மறைக்க வேண்டும் என்றும், கைகளை தொடர்ந்து சோப்பு கொண்டு கழுவ வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒரு மீட்டர் இடைவெளியில் இருமல், காய்ச்சல் அல்லது சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டோர் இருக்கும்பட்சத்தில், உங்களது முகத்தையோ, கண்களையோ, மூக்கையோ தொடக்கூடாது என்றும், தேவைப்பட்டால் அருகிலுள்ள சுகாதார மையத்தை உடனடியாக அணுக வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த குரல் பதிவானது, எதிர் முனையில் அழைப்பை எடுக்கும் வரை ஒலிக்கப்படுகிறது.

பல்வேறு மொழிகளை கொண்ட இந்திய நாட்டில், விழிப்புணர்வு ஆடியோவை, அந்தந்த பிராந்திய மொழிகளில் இடம் பெறச் செய்தால், அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக மக்கள் கருதுகின்றனர். மேலும் வெப்பமான சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவாது என்பது இதுவரை எங்கும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் யாரும் அந்தக் கருத்தை நம்பி, அலட்சியத்தோடு செயல்பட்டு, நோய்ப் பரவுதலுக்கு வழிவகுத்துவிட வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

NARENDRAMODI, HOSPITAL, CLIMATE, JIO, COVID19, CORONAVIRUS, CALLER TUNE, BSNL