மகன்களுக்கு மட்டும்தான் சொத்தா..? அப்போ மகள்களுக்கு..? கணவன், மனைவி சண்டையில் நடந்த பயங்கரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிள்ளைகளுக்கு சொத்தைப் பிரித்துக் கொடுப்பதில் ஏற்ப்பட்ட தகராறில் கணவரை தீ வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகன்களுக்கு மட்டும்தான் சொத்தா..? அப்போ மகள்களுக்கு..? கணவன், மனைவி சண்டையில் நடந்த பயங்கரம்..!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளத்தைச் சேர்ந்தவர்கள் பாக்கியராஜ்-மரியலீலா. 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த பாக்கியராஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அங்கு அவரது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாக்கியராஜின் மூத்தமகன் வீடு கட்டுவதற்காக பணம் கேட்டுள்ளார். இதனால் சொத்தை இரு மகன்களுக்கு பிரித்து கொடுக்க பாக்கியராஜ் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

இதற்கு மரியலீலா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இரண்டு மகள்கள் உள்ளதால் மகன்களுக்கு மட்டும் சொத்தைப் பிரித்துகொடுக்க கூடாது எனக் கூறியுள்ளார். மேலும் சொத்துக்களை தனது பெயரில் எழுதிக்கொடுக்க வேண்டும் என மரியலீலா கேட்டதாகவும், தனக்கு பிறகு பிள்ளைகள் சொத்துக்களை எடுத்துக்கொள்ளட்டும் என சொன்னதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதற்கு சம்மதிக்காத பாக்கியராஜ் சொத்துக்களை மகன்களுக்கு பிரித்துக்கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மரியலீலா, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பாக்கியராஜ் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. பாக்கியராஜின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மரியலீலாவின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். சொத்துப்பிரிப்பதில் கணவரை தீ வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

POLICE, TIRUNELVELI, ARRESTED, HUSBAND, WIFE, KILLED