'இத எதிர்பாக்கவே இல்ல'...'பேடிஎம்' நிறுவனத்திற்கு வந்த பெரும் சோதனை'...சோகத்தில் பேடிஎம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபண பரிமாற்றத்திற்காக நாடு முழுவதும் பலராலும் உபயோகப்படுத்தப்பட்டு வரும் பேமென்ட் ஆப் பேடிஎம். அதில் தற்போது பல்வேறு வசதிகள் இருப்பதால் பலர் அதனை தொடர்ந்து உபயோகித்து வருகிறார்கள். ஆனால் பேடிஎம் தற்போது பெரும் சோதனையில் சிக்கி தவித்து வருகிறது.
பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமன, ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் மட்டும் 4,217.20 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது. இது அந்த நிறுவனத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. ஒன்97 நிறுவனம் 2017-18 நிதியாண்டில் 1,604.34 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. ஆனால், 2018-19 நிதியாண்டில் மும்மடங்கு கூடுதலாக 4,217.20 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது.
இதன் தாக்கம் ஒன்97-ன் துணை நிறுவனங்களான பேடிஎம் மனி, பேடிஎம் பைனான்ஸ் சர்வீஸ், பேடிஎம் எண்டர்டெயின்மெண்ட் சேவை வரை நீண்டுள்ளது. இதனால் அந்த நிறுவனங்களும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. பிராண்ட் பெயரை வளர்க்கவும் தொழிலை விரிவாக்கவும் செலவழித்துதான் பேடிஎம் அதிக நஷ்டத்தை சந்திக்க காரணம் என வல்லுநர்கள் கூறியுள்ளார்கள்.
இதனிடையே கடந்த 2018 நிதியாண்டைவிட 2019 நிதியாண்டில் செலவும் 4,864.53 கோடி ரூபாயிலிருந்து 7,730.14 கோடி ரூபாய் அதிகரித்தது நஷ்டத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இதுகுறித்து பேடிஎம் நிறுவனமும் தனது வருடாந்திர பொருளாதார அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.