'மின்னணு பணப்பரிவர்த்தனை (Online Transaction) மூலம் பஸ் டிக்கெட் வாங்கலாமா?!'... தமிழக பட்ஜெட் ஸ்பெஷல்... சிறப்பு தொகுப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் அமைந்துள்ள சிறப்பம்சங்கள் வருமாறு:
*விபத்து உள்ளிட்டவற்றில் அகால மரணம் அடைவோருக்கான இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும்.
* விபத்தில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் இழப்பீடு.
* ஏழைக் குடும்பங்களுக்கு எல்.ஐ.சி.யுடன் இணைந்து விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
* அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டத்தில் 2020-21ம் ஆண்டுக்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு
* சென்னையில் வெள்ள பாதிப்புகளை குறைக்க ரூ.100 கோடி மானியம் நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டது
* அரசுப் பேருந்துகளில் மின்னணு பணப்பரிமாற்ற முறையில் பயணச்சீட்டு வழங்க நடவடிக்கை
* நீதி நிர்வாகத்திற்கு ரூ.1,403.17 கோடி நிதி ஒதுக்கீடு
* ஸ்மார்ட் ரேசன் கார்டு இருந்தால் எந்த கடையிலும் பொருட்களை வாங்கும் திட்டம் விரைவில் அறிமுகம்
* பேரிடர் மேலாண்மைத் துறைக்கு ரூ.1,360.11 கோடி நிதி ஒதுக்கீடு.