‘மனைவியை நடுத்தெருவில் இழுத்துப் போட்டு’.. ‘அடிக்கும் காவலர்’.. வீடியோ வெளியானதால் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மத்தியப் பிரதேச மாநிலத்தில் காவல் அதிகாரி ஒருவர், மனைவியை நடுரோட்டில் வைத்து சரமாரியாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வலம் வருகிறது.

‘மனைவியை நடுத்தெருவில் இழுத்துப் போட்டு’.. ‘அடிக்கும் காவலர்’.. வீடியோ வெளியானதால் பரபரப்பு!

மத்தியப் பிரதேச மாநிலத்தின், தார் (Dhar) நகரில் உள்ள ஒரு காவல் நிலையத்தில், பொறுப்பாளரான பணியில் இருப்பவர் நரேந்திர சூர்யவன்ஷி என்பவர். இவர் தனது மனைவியின் முடியைப் பிடித்து நடுத்தெருவில் தள்ளி தாக்குவதும், சக காவலர்கள் அவரைத் தடுப்பதுமான காட்சிகள் வீடியோவாக வலம் வருகின்றன.

நரேந்திரா வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக, அவரது மனைவி சந்தேகத்தின் பேரில் விசாரித்ததால் ஆத்திரமுற்ற நரேந்திரா மனைவியை அவ்வாறு தாக்கியதாகக் கூறியுள்ள போலீஸார் இது தொடர்பாக விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

நரேந்திராவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தவறான தொடர்பு உள்ளதாகவும், அதனை தட்டிக்கேட்டதால் அவர் மனைவியை தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.

POLICE, HUSBANDANDWIFE