'துணிச்சலானவள்.. அவள் மீது தவறல்ல'.. 'எதுவும் அவள் இழப்பை ஈடு செய்யாது' .. 'ஆழ்ந்த இரங்கல்கள் சுபஸ்ரீ'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை, குரோம்பேட்டை பவானி நகரைச் சேர்ந்த ரவி என்பவரின் 22 வயதேயான மகள் சுபஸ்ரீ கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், நேற்று மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் வழியில் குரோம்பேட்டை- துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக சென்றுகொண்டிருந்தார்.

'துணிச்சலானவள்.. அவள் மீது தவறல்ல'.. 'எதுவும் அவள் இழப்பை ஈடு செய்யாது' .. 'ஆழ்ந்த இரங்கல்கள் சுபஸ்ரீ'!

பள்ளிக்கரணையின் ரேடியல் சாலையில் வைக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட அரசியல் கட்சிப் பிரமுகரின் திருமண பேனர் ஒன்று சுபஸ்ரீயின் மீது விழுந்ததால், அந்த பெண் தூக்கி வீசப்பட்டு கீழ விழ, அவ்வழியே கோவிலம்பாக்கம் நோக்கி சென்றுகொண்டிருந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீயின் ஸ்கூட்டரில் மோதியது.

இதனால் லாரியின் முன்பக்கம் சிக்கிய சுபஸ்ரீ சில தூரங்கள் இழுத்துச் செல்லப்பட்டார். இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி சுபஸ்ரீ உயிரிழந்தார். இதனையடுத்து இந்த சம்பவமும், அதன் பின்னணியும், இதன் விளைவான கருத்துக்களும் வாதங்களும் தொடர்ந்தபடி இருக்கின்றனர்.

இந்த நிலையில் சுபஸ்ரீ பணிபுரிந்த நிறுவனத்தில் பணிபுரியும் சக ஊழியர்கள், அவரது கேபினில் மலர்க்கொத்து வைத்துவிட்டு, ட்விட்டரில் அவரின் இயல்புகளை நினைவலைகளாக பகிர்ந்து வருகின்றனர்.

ACCIDENT, BANNER, SHUBASHREE