‘இளைஞர் கைதுக்கு காரணமான 2 மாம்பழம்’.. விமான நிலையத்தில் நடந்த வித்தியாசமான சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

துபாய் விமான நிலையத்தில் பயணிகளின் லக்கேஜில் இருந்து மாம்பழங்களை எடுத்தற்காக இந்திய ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘இளைஞர் கைதுக்கு காரணமான 2 மாம்பழம்’.. விமான நிலையத்தில் நடந்த வித்தியாசமான சம்பவம்..!

உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் விமான நிலையத்தில் 27 வயதான இந்திய இளைஞர் பணியாற்றி வந்துள்ளார். ஒரு நாள் பணியில் இருந்தபோது அவருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அருகில் தண்ணீர் இல்லாமல் இருந்துள்ளது. அப்போது கன்வேயர் பெல்ட்டில் பயணிகளின் லக்கேஜ்கள் சென்றுகொண்டு இருந்துள்ளது. அதில் இருந்த ஒரு பெட்டியை திறந்து தண்ணீர் பாட்டில் இருக்கிறதாக என பார்த்துள்ளார். ஆனால் அந்த பெட்டியில் மாம்பழங்கள் இருந்துள்ளன. அதில் இருந்து இரண்டு மாம்பழங்களை அந்த இளைஞர் எடுத்து சாப்பிட்டுள்ளார்.

கடந்த 2017 -ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை அடுத்து கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அந்த இளைஞருக்கு துபாய் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் விமான நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்ததில், அவர் பயணிகளின் லக்கேஜில் இருந்து மாம்பழங்களை திருடியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். அப்போது இந்திய இளைஞரின் தரப்பில், தாகத்தால் 6 திர்ஹாம் மதிப்புள்ள 2 மாம்பழங்கள் மட்டுமே எடுத்ததாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 23 -ம் தேதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

INDIANMAN, STEALING, MANGOES, DUBAI, AIRPORT