'ஆறுதல் சொல்லியும் கேக்கல'...'கல்யாணமாகி 6 மாசம் தான் ஆச்சு'... 'என்ஜினீயர்' எடுத்த விபரீத முடிவு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கர்ப்பம் கலைந்ததால், திருமணமான ஆறாவது மாதத்தில் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'ஆறுதல் சொல்லியும் கேக்கல'...'கல்யாணமாகி 6 மாசம் தான் ஆச்சு'... 'என்ஜினீயர்' எடுத்த விபரீத முடிவு'!

தாளவாடி அருகே உள்ள முதியனூர் கிராமத்தை சேர்ந்த புட்டுசாமியின் மகள் சரஸ்வதி. பி.இ. சிவில் படித்திருந்த சரஸ்வதிக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த பிரதாப் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டும் என்பது  சரஸ்வதிக்கு கனவாக இருந்ததால், காரைக்குடியில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் சேர்ந்து விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்நிலையில் சரஸ்வதி கர்பமடைந்த்தால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றார். இதனைத்தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு தனது கிராமத்திற்கு சென்ற சரஸ்வதிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அங்கு வைத்து  சரஸ்வதிக்கு கர்ப்பம் கலைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ந்து போன சரஸ்வதி கதறி அழுதார். உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றி வந்தனர். எனினும் அவர் ஆறுதல் அடையவில்லை.

இதனிடையே கர்ப்பம் கலைந்தது குறித்து தினமும் அழுது கொண்டே இருந்த சரஸ்வதி, கடந்த 5-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், எலி மருந்தை எடுத்து சாப்பிட்டுவிட்டார். இதனால் அவர் வாந்தி எடுத்தார்.அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தாளவாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மைசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சரஸ்வதி நேற்று முன்தினம் இறந்தார்.

கர்ப்பம் கலைந்த காரணத்தினால் திருமணமான இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SUICIDEATTEMPT, ABORTION, NEWLY MARRIED, IAS