‘எலக்ட்ரிக் ஸ்டவ்வில் போதை ஜெல்’.. ‘பற்றி எரிந்த அறை’.. சென்னை விடுதியில் நடந்த பயங்கரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை விடுதி ஒன்றில் இருவர் போதை தரும் ஒருவகை கஞ்சா ஜெல்லை தயாரிக்க முயன்றபோது தீ விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்தனர்.

‘எலக்ட்ரிக் ஸ்டவ்வில் போதை ஜெல்’.. ‘பற்றி எரிந்த அறை’.. சென்னை விடுதியில் நடந்த பயங்கரம்..!

சென்னை திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் அருகே உள்ள மாந்தோப்பு காலணியில் தனியார் விடுதி உள்ளது. இந்த விடுதியில் ரேஸ் ராஜா, விக்னேஷ், மாசி, முகமது ரஷாக், ராஜேஷ் ஆகிய 5 பேர் நேற்று அறை எடுத்து தங்கியுள்ளனர். இதில் ரேஸ் ராஜாவும், விக்னேஷும் அறையில் இருந்துள்ளனர். மற்ற நபர்கள் வெளியே பொருட்கள் வங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது தாங்கள் கொண்டுவந்த எலக்ட்ரிக் ஸ்டவ் மூலம் கஞ்சா மற்றும் ரசாயனக் கலவை கலந்த ஒருவித ஜெல்லை தயாரிக்க இருவரும் முயற்சித்தாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அறை முழுவதும் தீ வேகமாக பரவியுள்ளது. இதில் சிக்கிகொண்ட இருவரின் உடலிலும் தீப்பற்றியுள்ளது. இதனால் அலறி அடித்துக்கொண்டு அறையைவிட்டு வெளியே வந்துள்ளனர். இதைப்பார்த்த விடுதி ஊழியர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மற்ற மூவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FIREACCIDENT, CHENNAI