'வாங்க வாங்க ஒரு டோக்கனை போட்டுட்டு போங்க'...'இந்த ஸ்பாட்ட பாக்க கட்டணம்'...வெளியான அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்திய பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரின் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு மாமல்லபுரத்தில் சமீபத்தில் நடைபெற்றதது. இதனால் மாமல்லபுரம் புதுப்பொலிவு பெற்றதது. ஏற்கனவே மத்திய அரசின் புவிசார் குறியீடு, மற்றும் உலக கைவினை நகரம் என பல பெருமைகளை பெற்றிருந்ததால் சுற்றலா பயணிகள் பலரும் மாமல்லபுரம் வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.

'வாங்க வாங்க ஒரு டோக்கனை போட்டுட்டு போங்க'...'இந்த ஸ்பாட்ட பாக்க கட்டணம்'...வெளியான அறிவிப்பு!

இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பிற்கு பிறகு மீண்டும் சர்வதேச அளவில் பிரபலமடைந்துள்ளது. பல்வேறு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்திற்கு படையெடுக்க துவங்கியுள்ளார்கள்.

இதையடுத்து மாமல்லபுரத்தில் புதிய கட்டண நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்து ரதம் ஆகியவற்றை பார்வையிட உள்ளூர் பயணிகளுக்கு 40 ரூபாயும், வெளிநாட்டு பயணிகளுக்கு 600 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்தது. 

இதைத்தொடர்ந்து மாமல்லபுரத்தில் இருக்கும் வெண்ணை உருண்டை பாறையை பார்வையிட இனி இந்தியர்களுக்கு ரூ.40, வெளிநாட்டவர்களுக்கு ரூ.600 கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NARENDRAMODI, MAMALLAPURAM BUTTER ROCK, TICKET, PRICE