'துணிப்பைக்கு இவ்வளவு ரூபாயா'?...'கேள்வி கேட்ட கஸ்டமர்'...'பிரபல நிறுவனம்' மீது அதிரடி நடவடிக்கை!
முகப்பு > செய்திகள் > இந்தியாதுணி பைக்கு 18 ரூபாய் வசூலித்த பிரபல பிக் பஜார் நிறுவனம் மீது நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
மளிகை பொருட்கள் முதல் பலதரப்பட்ட பொருட்களை பிக் பஜாரில் வாங்க முடியும் என்பதால் இதற்கு வாடிக்கையாளர்கள் அதிகம். இதனால் இதன் கிளைகள் நாடு முழுவதும் உள்ளன. இந்நிலையில் ஹரியானாவின் பஞ்ச்குலா பகுதியில் உள்ள இந்த நிறுவனத்துக்கு பல்தேவ் ராஜ் என்பவர், கடந்த மார்ச் 20 ஆம் தேதி பொருட்கள் வாங்கச் சென்றார். பொருட்களை வாங்கி விட்டு அதனை எடுத்து செல்ல பை ஒன்றை கேட்டுள்ளார். அப்போது வழங்கப்பட பைக்கு 18 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பல்தேவ் ராஜ், துணி பைக்கு ரூ.18 வசூலிக்கப்படும் என்று கடைக்குள் எங்கும் குறிப்பிடவில்லை. அப்படி இருக்கும் போது 18 ரூபாய் வசூலிப்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் அதனை அவர்கள் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அவர், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், வாங்கிய பொருட்களை பல்தேவ், பை இல்லாமல் எப்படி வெறும் கைகளில் கொண்டு செல்ல முடியும். அதனால் பைகளுக்கான செலவுகளை தனியாக வாடிக்கையாளர்கள் மீது பிக்பஜார் நிறுவனம் திணிப்பதை ஏற்க முடியாது என்று தீர்ப்புக் கூறியது.
மேலும் இதனை விசாரித்த நீதிமன்றம், வாங்கிய பொருட்களை பல்தேவ், பை இல்லாமல் வெறும் கைகளில் தூக்கிக்கொண்டு செல்ல முடியாது. அதனால் பைகளுக்கான செலவுகளை தனியாக வாடிக்கையாளர்கள் மீது பிக்பஜார் நிறுவனம் திணிப்பதை ஏற்க முடியாது என்று தீர்ப்புக் கூறியது.