'சென்னை சென்ட்ரலுக்கு வந்த பார்சல்'...'ரொம்ப நாள் கழிச்சு திறந்த அதிகாரிகள்'...காத்திருந்த அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, நாக்பூரில் இருந்து சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில், கடந்த ஏப்ரல் மாதம் பார்சல் ஒன்று ராணுவம் மூலம் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அந்த பார்சலுக்கு யாரும் உரிமை கோரவில்லை. இதனால் அந்த பார்சல் கடந்த அக்டோபர் மாதம் வரை வைக்கப்பட்டிருந்தது.

'சென்னை சென்ட்ரலுக்கு வந்த பார்சல்'...'ரொம்ப நாள் கழிச்சு திறந்த அதிகாரிகள்'...காத்திருந்த அதிர்ச்சி!

இதையடுத்து ரயில்வே நிர்வாகம், அந்த பார்சலை ரயில்வே குடோனுக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், அந்த பார்சலை ஏலம் விட முடிவு செய்தனர். ராணுவத்தில் இருந்து வந்த பார்சல் என்பதால் ஏலம் விடுவதற்கு முன்பு அதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் பார்சலை  திறந்து பார்த்தார்கள்.

அப்போது  ராணுவத்தில் பயிற்சி பெறுவோர் பயன்படுத்தப்படும் 10 கையெறி குண்டுகள் இருந்ததை கண்டு அதிகாரிகள் சற்று அதிர்ச்சி அடைந்தனர். இதுபோன்ற முக்கியமான பார்சலை ஏன் ராணுவத்தினர் எடுத்து செல்லவில்லை என அதிகாரிகள் சற்று குழப்பமடைந்தனர். இதையடுத்து நடந்த விசாரணையில், 172வது பட்டாலியனான அந்தமானுக்கு பதில், 72 வது பட்டாலியனான சென்னைக்கு பார்சல் வந்தது தெரியவந்தது.  பின்னர், அதில் இருந்த 10 கையெறி குண்டுகளையும் பத்திரமாக மீட்டனர்.

CHENNAI, CENTRAL RAILWAY STATION, PARCEL, MILITARY GRENADES