'உங்க கனவு இல்லத்துக்கு நான் கேரண்டி!'.. 'ஆனா ஒரு கண்டிஷன்'.. லட்சக்கணக்கில் 'பண மோசடி' .. சிக்கிய ரூபினி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீடு கட்ட கடன் தருவதாகவும், அதற்கு முன்பணமாக 25 ஆயிரம் ரூபாய் முதல் 85 ஆயிரம் ரூபாய் வரை கொடுங்கள் என்று கூறி பணம் வாங்கியும், மோசடி செய்த பெண் ஒருவரை நீலகிரி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கிப் பாளையம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான ரூபினி பிரியா. இவர்தான் இப்படி ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, கடன் பெற்றுத்தருவதாகக் கூறி 65 பேரிடம் சுமார் 18 லட்சம் ரூபாய் வரை பணத்தைத் தேற்றிக்கொண்டுள்ளார்.
இவரின் நூதன மோசடியால், இவரை பிடிக்க தனிப்படை அமைத்த போலீஸார், விரைந்து ரூபினி பிரியா பற்றி விசாரணைகளை முடுக்கிவிட்டனர். அப்போதுதான் கோவையைச் சேர்ந்த சிவா, கார்த்திக் மற்றும் வெங்கடேஷ் உள்ளிட்ட ஏஜெண்டுகளின் மூலம் ரூபினி பிரியா இப்படியான மோசடிகளில் ஈடுபட்டது தெரியவந்தது.
ஆனால் இதில் சிவா ஏற்கனவே ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருப்பதால், அவரை விசாரித்த போலீஸார் சரியான தருணத்தில் ரூபினி பிரியாவை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இதையறிந்ததும் ரூபினியால் பாதிக்கப்பட்டவர்கள் ஊட்டியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகம் முன்பு குவிந்துள்ளனர்.