'இந்த' இரண்டு நாட்களுக்கு 'கோயம்பேடு' மார்க்கெட் இயங்காது... என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையின் மிகப்பெரிய மார்க்கெட்டுகளில் ஒன்றான கோயம்பேடு மார்க்கெட் 2 நாட்களுக்கு இயங்காது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

'இந்த' இரண்டு நாட்களுக்கு 'கோயம்பேடு' மார்க்கெட் இயங்காது... என்ன காரணம்?

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் காய்கறி மார்க்கெட்டுகளில் மக்கள் அதிகளவில் குவிந்து காய்கறிகளை மொத்தமாக வாங்கி குவித்து வருகின்றனர்.

இதனால் சில காய்கறிகளின் விலை திடீரென ஜெட் வேகத்தில் உயர ஆரம்பித்து இருக்கிறது. இந்த நிலையில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் வருகின்ற 27 மற்றும் 28-ம் தேதிகளில் கோயம்பேடு மார்க்கெட் இயங்காது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டும் வருகின்ற 31-ம் தேதி வரை செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.