'உலகக் கோப்பையில்'..'நான் வெளையாண்டிருந்தா '.. சிரிச்சு செரிக்க வைத்த.. அமைச்சர் தடாலடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அதிமுக அமைச்சர் ஜெயகுமார் அவ்வப்போது பல விசித்திரமான பேட்டிகளை கொடுப்பதுண்டு.

'உலகக் கோப்பையில்'..'நான் வெளையாண்டிருந்தா '.. சிரிச்சு செரிக்க வைத்த.. அமைச்சர் தடாலடி!

முன்னதாக, பாக்ஸிங் விளையாட்டில் வென்ற மாணவர்களுக்கு பரிசளித்து ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட, அமைச்சர் ஜெயகுமார், அந்த மாணவிக்கு இரண்டு பாக்ஸிங் மூவ்களைச் சொல்லிக் கொடுத்து, தன்னைப் போல் செய்யச் சொல்லி, ‘நானும் பாக்ஸர்தான் மா’ என்று கூறினார்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு தற்போது, உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயகுமார், ‘நிச்சயமா நான் விளையாண்டிருந்தா ஜெயிச்சிருப்பாங்க.. ஒரு சான்ஸ் வாங்கிக் கொடுங்களேன்’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் பேசியவர், அரசியலில் வெற்றி, தோல்வி இரண்டும் சகஜம், இது தற்காலிகம்தான். ஆகையால் எதிர்வரும் காலத்தில் இந்திய அணியும், தமிழ்நாட்டில் அதிமுகவும் வெற்றி பெறும் என்று கூறி பேச்சை முடித்துக்கொண்டார்.

ICCWORLDCUP2019, ICCWORLDCUP, JAYAKUMAR, SEMIFINALS