'போதைக்காக இப்படியா? '... 'சென்னை ரிசாட்டில்' அதிரடி ரெய்டு... சிக்கிய 'ஐடி ஊழியர்கள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் சட்ட விரோத மது விருந்தில் பங்கேற்ற ஐடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'போதைக்காக இப்படியா? '... 'சென்னை ரிசாட்டில்' அதிரடி ரெய்டு... சிக்கிய 'ஐடி ஊழியர்கள்'!

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே தனியார் ரிசார்ட்டில் சட்ட விரோதமாக மது கொண்டாட்டம் நடைபெறுவதாக,திருவள்ளூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பொன்னிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அவர் உடனடியாக காஞ்சிபுரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.அங்கு சென்ற போலீசார் ரிசார்ட்டை சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.

காவல்துறையினர் நடத்திய சோதனையில் ரிசார்ட்டில் மது மற்றும் போதை பொருளான கஞ்சா விருந்து நடைபெற்றதும், அதில் கலந்து கொள்வதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து மது விருந்தில் பங்கேற்ற 7 பெண்கள் உட்பட 160 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்கள் அனைவரும் தனியார் ஐடி நிறுவன ஊழியர்கள் என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரையும்  வேனில் ஏற்றி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களின் கைப்பை மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.அதோடு அங்கிருந்த மதுபாட்டில்களையும்,கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.கொண்டாட்டம் என்ற பெயரில் போதை விருந்தில் ஈடுபட்ட ஐடி ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம்,அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ECR RESORT, LIQUOR PARTY, IT STAFF, ARRESTED, DRUG PARTY