'ஒரு போட்டோ இல்லாததால்'.. நீட் தேர்வெழுத முடியாமல் தவித்த மாணவர்.. நெகிழவைத்த காவலரின் செயல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஒரே ஒரு தேர்வு எழுத முடியாமல் எத்தனையோ மாணவர்கள் விபரீதமான முடிவுகளை எடுத்துள்ளனர்.

'ஒரு போட்டோ இல்லாததால்'.. நீட் தேர்வெழுத முடியாமல் தவித்த மாணவர்.. நெகிழவைத்த காவலரின் செயல்!

அப்படித்தான், காவலர் ஒருவர் ஒரே ஒரு பாஸ்பார்ட் சைஸ் புகைப்படம் இல்லாததால், இறுதி நேரத்தில் தேர்வு எழுத முடியாமல் வெளியேற்றப்பட்ட மாணவர் ஒருவருக்கு 40 ரூபாய் கொடுத்து கடைசி நேரத்தில் காப்பாற்றியுள்ள சம்பவம் பலரையும் நெகிழவைத்துள்ளது.

கடந்த வருடம் நீட் தேர்வில்,  மாணவிகளின் துப்பட்டா, ஜிமிக்கி, கம்மல், வளையல், கையில் கட்டப்பட்டிருந்த கயிறு முதலானவற்றை அணிந்து தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டதால், இம்முறை உஷாராக அனைவரும் சென்றுள்ளனர். இதில்  சென்னை, கோவை உட்பட தமிழகத்தில் 14 மாவட்டங்களில் உள்ள 32 நீட் மையங்களில் தேர்வு நடந்த நிலையில், மதியம் 12 மணிக்கு மேல், 1.30க்குள் தேர்வறைக்குள் நுழைந்துவிட வேண்டும் என்பது இதியாக இருந்தது.

மேலும் தேர்வறையைப் பொருத்தவரை ஹால் டிக்கெட், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஸ்டாம்ப் சைஸ் போட்டோ உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்று இல்லையென்றாலும் ‘நீட் எக்ஸாம் எழுதுவது நாட் பாசிபிள்’ என்கிற நிலையில், கோவை நேஷனல் மாடர்ன் மேல்நிலைப்பள்ளியில், மாணவன் ஒருவர் கடைசி நேரத்தில் வெளியேற்றப்பட்டார்.

ஆனால், அப்போது அங்கிருந்த காவலர் சரவணக்குமார், அந்த மாணவனுக்கு தன் பாக்கெட்டில் இருந்து 40 ரூபாய் எடுத்துக்கொடுத்து, அம்மாணவரை புகைப்படம் எடுக்கச் செய்து, கடைசி நிமிடத்தில் தேர்வறைக்குள் அனுப்பியுள்ளார்.  40 ரூபாய் பெரிய விஷயமல்ல, அந்த மாணவனின் மருத்துவராகும் கனவுக்கு தடையாக இருந்த கடைசி நேரத் தடையை உடைத்து வழிஉண்டாக்கிய சரவணக்குமாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.