இன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

1, உக்ரைன் விமானம் நேற்று காலை புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. யாரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை எனவும் ஈரான் அறிவித்துள்ளது.

இன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

2, பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தடயவியல் ஆய்வகங்கள் அமைத்து அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3, தமிழகத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில்  மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாக சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

4, அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டு வருகிறது, அதை ஈரான் கைவிடவேண்டும் என்றும்,  உலகத்திற்கே அச்சுறுத்தலாக ஈரான் இருந்து வருவதாகவும், அதன் மீதான தடைகள் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

5, ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகை ரேஷன் கடைகளில் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. குடும்ப அட்டை ஒன்றுக்கு பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளிட்டவைகளுடன் 1000 ரூபாய் ரொக்கப் பணமும் கொடுக்கப்படுகிறது. விடுபட்டவர்கள் 13-ஆம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6, நாட்டில் நடைபெற்று வரும் வன்முறைகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

7, தர்பார் படத்தை சட்டவிரோதமாக 1370 இணையதளங்களில் வெளியிட தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8, ஜன.11ம் தேதி நடைபெறும் மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றியத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மாநில தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

NEWS, HEADLINES