'தொடங்கியது அக்னிநட்சத்திரம்...' 'அடங்குமா கொரோனா?...' 'இந்த ஆண்டு எப்படி இருக்கப் போகிறது வெயில்...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று (திங்கள்) முதல்  தொடங்கியது. இந்த ஆண்டு வழக்கத்தை விட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'தொடங்கியது அக்னிநட்சத்திரம்...' 'அடங்குமா கொரோனா?...' 'இந்த ஆண்டு எப்படி இருக்கப் போகிறது வெயில்...'

ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலகட்டமாக 24 நாட்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான அக்னி நட்சத்திர கால கட்டம் இன்று முதல் தொடங்கியது. இன்று தொடங்கி அடுத்த 24 நாட்களுக்கு அதாவது வரும் 28ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வழக்கத்தை விட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு கோடை காலம் தொடங்கியதில் இருந்தே தமிழகத்தில் பல நகரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் வழக்கத்தை விட அதிகளவில் வெப்பம் பதிவாகியுள்ளது.

இனி வரும் காலங்களில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும் மக்கள் அதிக வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கத்தை கத்திரி வெயில் குறைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதிக வெப்பம் கொரோனா வைரஸ்களை அழிக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கோடை வெயில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இதனால் சற்று அசௌகரியங்கள் ஏற்படும் போதிலும், வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் பெருமளவில் பாதுகாக்கப்படுவார்கள் என்றே கருதப்படுகிறது.