'என் கணவர் வீரமரணம் அடைஞ்சது பெருமையா இருக்கு...' 'குடும்பத்த நீதான் பார்த்துக்கணும்னு சொல்வார்...' மனைவி கண்ணீருடன் உருக்கம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பயங்கரவாதிகளின் தாக்குதலில் தன் உயிரை இழந்த ராணுவத்தளபதியின் மனைவி அளித்துள்ள பேட்டி அனைவரையும் கண்கலங்கும்படி செய்துள்ளது.

'என் கணவர் வீரமரணம் அடைஞ்சது பெருமையா இருக்கு...' 'குடும்பத்த நீதான் பார்த்துக்கணும்னு சொல்வார்...' மனைவி கண்ணீருடன் உருக்கம்...!

ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியான ஹந்த்வாராவில் பயங்கரவாதிகள் ஊடுருவியதால், அவர்களைத் தாக்க இந்திய ராணுவத்துடன் இணைந்து ஜம்மு-காஷ்மீர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்தியப்படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும், குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாரா பகுதியில் பயங்கரத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

சுமார் 8 மணி நேரங்களுக்கும் மேலாக நடந்த இந்த தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர். துர்த்தாஷ்டவசமாக இந்திய தரப்பிலிருந்து ராணுவத்தளபதி அஷுதோஷ் ஷர்மா, மேஜர் அஜூஜ் சுத், ராணுவ வீரர்கள் நாயக் ராஜேஷ், லான்ஸ் நாயக் மற்றும் காஷ்மீர் உதவி ஆய்வாளர் ஒருவரும் மக்களுக்காக போராடி வீர மரணம் அடைந்தனர். இந்த போராட்டத்தின் முடிவில் பெருவாரியான மக்களை ராணுவத்தினர் காப்பாற்றினர்

கணவரை பார்த்து இரு மாதங்களுக்கு மேலாகிய நிலையில், தன் கணவர் பயங்கரவாதிகளுடன் போராடி மக்களை காப்பாற்றும் பணியில் உயிரிழந்த செய்தி இந்திய ராணுவத்தளபதிஅஷுதோஷ் ஷர்மாவின் மனைவி பல்லவியிடம் கூறப்பட்டது. ஆனால் சிறிதும் கலங்காமல் தன் கணவரது வீர மரணம் குறித்து திருமதி.பல்லவி பேசிய சம்பவம் அனைவரையும் கலங்க செய்துள்ளது.

'நம் தாய் நாட்டிற்காக என் கணவர் போராடி வீர மரணம் அடைந்தது எனக்கு பெருமை. அவர் கண்களில் எப்போதும் நான் கண்ணீரை பார்த்ததில்லை. ஆயிரத்து ஐநூறு ராணுவ படை வீரர்களைப் பார்க்க வேண்டிய கடமை எனக்கிருக்கிறது. எனவே குடும்பத்தை நீ தான் பார்த்துக்கொள்ள வேண்டும். தன் தாய்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்வது ஒரு மரியாதை என்பார். அவரின் இந்த முடிவை நான் முழுமையாக மதிக்கிறேன்' என கூறியுள்ளார் வீர பெண்மணி பல்லவி.