‘அடுத்த 2 நாட்கள்’... ‘குறையும் மழை’... டெல்டா மாவட்டங்களில் ‘கனமழை’... வானிலை மையம் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அடுத்த இரண்டு நாட்கள் தமிழகத்தில் மழைப்பொழிவு குறைவாகவே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவி வருகிறது. இதன்காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு, லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வெளுத்து வாங்கிய மழை, தற்போது குறைய வாய்ப்புள்ளது.
ஆனால் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை ஓரிரு இடங்களில், லேசான மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக, ஆந்திராவின் பல்வேறு இடங்களில் மிக கன மழை முதல், அதீத கன மழையும், ஒடிசாவின் தெற்கு பகுதிகளில், ஒரு சில இடங்களில் மிக கன மழையும் பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளது.